அதென்ன செங்கதிர்?

தோன்றியதை பதிவு செய்ய Blog தொடங்கியாயிற்று. என்ன தொடங்கினாலும் பெயர் வைக்க வேண்டும், வைத்த பெயருக்கு காரணம் இருக்க வேண்டும். 
காரணம் இன்றி காரியம் இல்லை..! 

செங்கதிர் என்று பெயர் சூட்டியாயிற்று.....என்ன காரணம்?

'ஞாலத்தின் மாணப் பெரிது' என்பது வள்ளுவன் வாக்கு. அந்த ஞாலத்திற்கே ஒளி கொடுப்பவன் ஆதவன். நீர் மட்டும் அல்ல...ஒளி இன்றியும் அமையாது உலகு. நீரும் காற்றும் உய்விக்க வந்ததெனில், ஒளி செய்விக்க வந்தது. உயிர் வாழ நீரும் காற்றும் வேண்டுமெனில் அறிவு பெற ஒளி வேண்டும். செங்கதிர் விசாலமான ஞானத்தின் விலாசம்..!

ஆகவே கற்கவும் கற்பிக்கவும் தலைப்படும் பொருட்டுக்கு செங்கதிர் என்ற பெயரே சாலச்சிறந்தாக பட்டது.பட்டதும் பெயர் வைத்தாகி விட்டது...!

அதென்ன செங்கதிரொடு 1996?

என் தந்தை வழி, தாய் வழி வந்த பரம்பரையில் இதுகாறும் முதன்முதலாய் ஒருவன் (நான்தான்...!) கல்லூரி படி தொட்ட ஆண்டு 1996...! (அதுவும் பொறியியல் கல்லூரி)

OK, Blog தொடங்கியாயிற்று, இனி என்ன செய்யலாம் ???

இனி இந்தச் செங்கதிர் உலகமெங்கும் ஞான ஒளி வீசும்...!

தெரிந்ததும் அறிந்ததும் என அனைத்தும் பகிரும்...!

தெரியாதன எல்லாம் தெரிந்து பகிரும்...!

எம்பணி சிறக்க உம்மருள் வேண்டும்
ஸ்ரீராம் சம்பத் குமார் 

1 comment:

  1. Interesting. வாழ்த்துக்கள்.
    செங்கதிர் என்றவுடன் வந்துவிட்டாரய்யா இன்னுமொரு இடதுசாரி சிந்தனையாளர் என நினைத்துவிட்டேன்!

    ReplyDelete