எழுத்தால் மாயம் புரிந்த வித்தகர்கள்...!

” எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ”

வள்ளுவன், கம்பன், இளங்கோ போன்ற தமிழ் மறையோர் கொடுத்த எழுத்தெல்லாம் கண்ணென தகும் தான். ஆயினும், திரைகடல் ஓடி திரவியம் தேடுவதைப்போல, திரைகடல் தாண்டி எழுதப்பட்டவைகளும் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை தான்.

அவ்வாறு, தன் எழுத்தால் சமூக மாற்றங்களை உருவாக்கி வாசித்தலின் இன்பத்தை ததும்ப ததும்ப தந்தவர்கள் நிறைய பேர். வாசிக்க தெரிந்த யாரும், இவர்களின் எழுத்துக்களை மட்டும் வாசிக்காமல் விட்டு விடக்கூடாது என்று ஒரு list எடுத்தால்..முன்னால் வந்து நிற்கும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் யார் ? 

யாரெல்லாம் அந்த listல் வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள் ? அப்படி என்ன பெரிதாக எழுதிக் கிழித்து விட்டார்கள் ?..வாருங்கள்..அலசலாம்....!

10. Franz Kafka (A.D 1883 - 1924)

1988ஆம் வருடம், 'The Trial' (விசாரணை) என்று பெயரிட்டு, ஜெர்மன் மொழியில் கையால் எழுதப்பட்ட சிறுகதையின் மூலப்பிரதி ஒன்று ஏலத்திற்கு வந்தது. 

ஏலத்தின் முடிவு தொகை எவ்வளவு தெரியுமா ? 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.  13.5 கோடி ரூபாய். 1988ல் 13.5 கோடி என்றால் இன்றைய மதிப்பு எவ்வளவு பெரும் ?

அந்த நேரத்தில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட கையால் எழுதப்பட்ட சிறுகதையின் மூலப்பிரதி இது தான். அதுவும் Franz Kafka இறந்து 65 வருடங்களுக்குப் பிறகு. (at that point the highest price ever paid for a modern manuscript) 

இன்றைய செக் குடியரசின் தலைநகர் Prague ல் பிறந்தாலும் ஜெர்மன் மொழியே தாய்மொழி ஆனதால், இவர் ஜெர்மானிய யூதராகவே அறியப்படுகிறார். 
 
படித்து முடித்து வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் தன்னை ஒரு எழுத்தாளனாகவே இவர் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் எழுதினார், நிறைய எழுதினார். என்ன...எழுதியது எல்லாமே கடிதங்கள். தாய்-தந்தைக்கு, நண்பர்களுக்கு, காதலி(களு)க்கு என்று கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவரை, கதைகள் எழுத ஊக்குவித்தது நண்பன் Max Brod. 

காரணம்...இவரின் எழுத்து நடை..உள்மன எண்ண அலைகளை வித்யாசமான நடையில் விவரிக்க தெரிந்த வித்தை. 

ஒரு புத்தகம் என்பது என்ன? Kafka இப்படி சொல்கிறார்: 'உறைந்து போன கடலின் உள்ளிருக்கும் கோடாரி'

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன்னை இப்படி வரையறுக்கிறார்: 'நான் சுதந்திரமானவன்..அதனாலேயே அடிக்கடி தொலைந்து போகிறேன்...!

தான் காதலித்த பெண்ணை இப்படி தான் அறிமுகப்படுத்துகிறார்:

'அவளை முதலில் பார்த்த போது, எனக்கு பெரிதாய் எந்த ஈர்ப்பும் இல்லை..கண் எதிரே காணக்கிடைகிறாள் என்று தான் பார்த்தேன்'

கதைகள் எழுத தொடங்கினாரே தவிர, பெரும்பாலான கதைகளை முடிக்கவே இல்லை. முடித்த கதைகளையும் புத்தகங்களாக ஆக்கவும் இல்லை. இளம் வயதிலேயே நோய்வாய் பட்டு எழுத்தாளன் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் இறந்தும் போனார். 

இவருடைய எழுத்துக்களை வெளிஉலகிற்கு கொண்டு வந்தது..நண்பன் Max Brod தான்.

1960ல், ஓவ்வொன்றாக  வெளி வரத்துவங்கிய இவரது கதைப் புத்தகங்கள் (மொத்தமே 18 தான்) ஜெர்மானிய இலக்கிய வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, அதிகாரத்துவ கம்யூனிச அரசின் கைக்குள் இருந்த கிழக்கு ஐரோப்பாவில், வாசிப்பவர்கள் மத்தியில் Kafka தீ பரவியது. 

வித்யாசமான நக்கலும் நையாண்டியும் மிக்க இவரது வரிகள் தீவிரமான மேற்கோள்களாக கொள்ளப்பட்டன. ஆங்கில அகராதியில் 'Kafkaesque' என்ற புதிய வார்த்தையே உருவானது.

Kafka வின் கதைகளை முழுமையாக படித்து உணர வேண்டும் என்று  நிறைய இலக்கியவாதிகள் ஜெர்மன் கற்றார்கள். உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்த்தார்கள். ஐரோப்பிய பள்ளி, கல்லூரி பட திட்டங்களில் Kafka விற்கு நிரந்தர இடம் கொடுத்தார்கள்.

'மொழிகள் என்பதே ஒரு அசிங்கமான மொழிபெயர்ப்பின் மிச்சங்களே'  என்ற அவரது சிந்தனைகள் நிச்சயம் கவனிக்க தக்கவை.

உலகத்தரம் வாய்ந்ததாக, படித்தேயாக வேண்டியதாக கொண்டாடப்படும் Kafkaவின் சில படைப்புகள்:

1.  'The Trial' (விசாரணை)
2.  'The Metamorphosis (உருமாற்றம்)

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படித்துப்பாருங்கள். Kafkaவின் வித்யாசமான உலகம் உங்களை வரவேற்கும்...!

http://www.kafka-online.info/ (இங்கே Kafka வின் கதைகளை ஆங்கிலத்தில் படிக்கலாம்)

'இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா நம்பிக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன..ஆனால் அதில் எதுவும் நமக்கானவை அல்ல...!
- by Franz Kafka

************************************************************************

அடுத்த எழுத்தாளரை அலசும் முன்..!

கொஞ்சம் இடைவேளை ...!
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்


1 comment:

  1. Franz Kafka பற்றி ஒரு ரத்தினச்சுருக்கமான அறிமுகம். தொடருங்கள்.

    ReplyDelete