எல்லாம் கடந்து போகும்...!

என்ன செய்யலாம் ?

மூன்று பெண்கள்..அதுவும் இளமையின் வாசலில், கண்கள் கொள்ளா கனவுகளுடன்... நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி நகரும்போதே..நசுக்கப்பட்டு விட்டார்கள்...!

ஊடகங்கள் மூலமாக நமக்கு தெரிந்து வேதனைப்படவைத்தது இப்படி சிலபேர் மட்டுமே...தெரியாமல் கருகிப் போனவர்கள் இன்னும் நிறைய...!

வினோதினி: காதலை ஏற்க மறுத்ததால், அமிலம் வீசப்பட்டு பரிதாப சாவு 

வினுப்ரியா: காதலை ஏற்க மறுத்ததால், முகநூலில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, மனவுளைச்சலில் தற்கொலை.

ஸ்வாதி: (காரணம் இன்னும் தெரியவில்லை) பொது இடத்தில் வெட்டப்பட்டு கொடூர சாவு.

முன் இரண்டிற்காக தண்டிக்கப் பட்டவர்களும், பின் ஒன்றிற்காக தேடப்படுபவனும்...இளைஞர்கள்...!

எல்லோரையும் போல படித்துக்கொண்டோ, வேலை செய்துகொண்டோ, நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டோ, சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சடுதியில் புத்தி தடுமாறிய இளைஞர்கள் ...!

என்ன செய்யலாம் ? இதை எப்படி தடுப்பது ?

மனோதத்துவ ஞானிகள், மருத்துவர்கள், சமூக நீதியாளர்கள் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம் ஒன்று தான்...!

யாதொன்றையும் முளையிலேயே விதைக்க வேண்டும்...!

புரியும் படி சொல்வதானால், இன்றைய இளைஞர்களை கட்டுப் படுத்தத் தவறிவிட்டோம். நாளைய இளைஞர்களான மாணவர்களிடம் விதைப்போம். வரும் காலமாவது நல்ல காலமாக இருக்கட்டும்.

சரி..என்ன விதைப்பது ? எப்படி விதைப்பது ?

இதையெல்லாம் நீண்ட நெடும்காலமாக ஆராய்ந்து, சோதித்துப் பார்த்து..செயல்படுத்தியும்  வருகிறன, உலகில் பல நாடுகள், நாம் தான் இன்னும் செயல்படுத்த தொடங்கவே இல்லை...!

1. அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, தேர்வுக்கு என்று இல்லாத ஒரு பொதுப்பாடம் (Generic Subject without Exam) 'குற்றமும், நீதியும் தண்டனையும்' (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)

2. இந்தப் பொதுப்பாடத்தை, பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இன்றி, நீதித்துறை மற்றும் காவல்துறை சார்ந்தவர்களும் மாணவர்களுக்கு கற்பிக்க வரைமுறை 

3. வருடத்திற்கு ஒரு முறை, சிறைச்சாலையையும் அதன் நடைமுறைகளையும் நேரில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறை.

4. இவையெல்லாம் சமூகக் குற்றங்களாகும், இதை செய்தால் இப்படிப்பட்ட தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும் என்று ஆழமாக பதிய வைத்தல்.

5. குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் வாழ்வும் நிலைமையும் விளக்கப் படங்களாக விவரித்தல்.

 இந்த 5 விஷயங்களை செயல்படுத்திதான், பல நாடுகள் இளம் குற்றவாளிகளின் விகிதாசாரத்தை குறைத்து வருகின்றன என்பது நிதர்சனம்.

இளம் வயதிலேயே, இதெல்லாம் கொடுமையான குற்றம், இதைச்செய்தால், நீ இப்படியெல்லாம்  நிச்சயமாக தண்டிக்கப்படுவாய்....உன் எதிர்காலமே சூனியமாகி விடும் என்று..திரும்ப..திரும்ப..திரும்ப..திரும்ப...சொல்லிக் கொடுக்க வேண்டும்...!

சரி..பள்ளிக்கே போகாதவர்களுக்கு ?...அட போங்க பாஸ்..பத்தாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி என்பது கட்டாயம் வேண்டும்.

நம்ம நாட்ல இதாங்க பெரிய பிரச்சனை...ஒரு ஓட்டையை அடைக்கப் போனா ஒன்பது ஓட்டை வெளிய தெரியுது..அந்த ஒவ்வொரு ஓட்டையும் இன்னொரு ஒன்பது ஓட்டையை வெளிக்காட்டுது...! இப்படி ஓட்டைகளாவே இருக்கு..அதுக்காக ஓட்டைகளை அடைக்காம விட்டுட முடியுமா..!

அடைச்சுதான் ஆகணும்..ஒண்ணொண்ணா...!

********************************************************************************
நல்லா கொடுக்கறாங்க டீடெயிலு...!

Loch Ness Monster னு ஒண்ணு கேள்வி பட்டிருக்கீங்களா ?

சுத்தத் தமிழ் படுத்திப்பார்த்தா இப்படி வருது: 'கடற்கழி நிலக்கூம்பு மிருகம்'

வேணாம் விட்றுங்க...! இது ஒரு வகை கடல் பிராணி..ஆனா கிட்டத்தட்ட டைனோசர் சைஸுக்கு பெருசு. பார்க்க கூட அப்படியே தான் இருக்குமாம்.

இது இருந்துச்சா....இருக்கா, இல்ல உட்டாலக்கடியானு நிறையவே ஆராய்ச்சிகள் நடந்தது..நடந்துகிட்டும் இருக்கு.



இதை..இங்கப் பார்த்தேன், அங்கப் பார்த்தேன்..selfie எடுத்துக்கிட்டேன்னு நெறைய பேர் சுத்திகிட்டு திரிஞ்சாலும்...ஏனோ அமெரிக்கர்கள் இது மேல ஒரு ஆர்வம் காட்டவே இல்ல...ஆனா பிரிட்டிஷ்காரங்க இதை இன்னும் கெட்டியா புடிச்சுகிட்டு ரொம்பவே விளையாடிகிட்டு இருக்காங்க....!

விஞ்ஞானப்பூர்வமான  விஷயம் இது தான்: இந்த கடல் டைனோசர்னு ஒண்ணு இப்ப பூமில உயிரோட இல்லை...சில லட்ஷம் வருஷங்களுக்கு முன்னால இருந்திருக்கலாம்...!

ஆனா நம்ம ஆளுங்க சும்மாவே இருக்க மாட்டாய்ங்களே..! அப்பப்ப ஏதாவது கிளறி விட்டு பீதியை கெளப்பறது தானே இவங்க வேலை ...!

ஸ்காட்லாந்துல ஒரு ஏரி கரை ஓரமா திடும்னு ஒரு நாள் இப்படி கெடந்துச்சு...!




பார்த்த உடனே 'உவ்வே' வர்ற மாதிரி இருக்குற இது தான் தூங்கிட்ருந்த நாட்டையே பரபரப்பாக்கிடுச்சு...!

dull அடிச்சுப் போன 'Loch Ness Monster' விஷயம் மறுபடி சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

இது அது தானா , அது தானான்னு அங்கங்க அலற, கடுப்பான போலீஸ் வேகமா விசாரிச்சு...விஷயத்தை புஸ் ஆக்கிட்டாங்க...!

அது ஒரு ஒட்டகச்சிவிங்கியோட எலும்புகளாம்...! 'கடற்கழி நிலக்கூம்பு மிருகம் லாம் இல்லையாம்...! அடச்சே...!

அப்ப அந்த ஓட்டகச்சிவிங்கி ஏன் அங்க வந்து செத்துப்போச்சு...! இத்தனை நாளா, அந்த ஏரில படகு சவாரி செஞ்சவங்க யாருமே ஏன் அந்த ஓட்டகச்சிவிங்கியை பார்க்கவே இல்லை ?

விசாரிச்சதுல, எங்கயோ செத்துப் போன அதை இங்க கொண்டு வந்து போட்ருக்காங்களாம்...! யார்ரா செஞ்ச வேலை இது..?

அவங்களைத்தான் Scotland போலீஸ் தீவிரமா தேடிகிட்டு இருக்காங்களாம்..மவனே கைல கிடைச்சா காலி....!


*********************************************************************************

'கொடை இடையாள்'

 'கொடி  இடையாள்' ங்கறது அழகான பொண்ணுக்கு ஒரு இலக்கணமா நாம கேள்விப்பட்டிருக்கோம் , ஆனா இது என்ன கொடை இடையாள் ...?

'Bobby-Jo'ங்கற 43-வயசு பெண்மணி தான் அவங்க..அமெரிக்காவை சேர்ந்தவங்க...!

எட்டு அடியாம்...! என்னாது  இது எட்டு அடி ? வேற வொண்ணும் இல்லேங்க..இது அவங்க இடுப்போட சுற்றளவு..! அம்மாடி..எம்மாம் பெரிய இடை..!

இடைவெளியே இல்லாம அப்படி என்ன சாப்பிடங்களோ தெரியலை..இடை பெருத்துப்போச்சு...!

பெருத்த இடையும் பருத்த உடம்பும் அவங்கள வேலை வெட்டி செய்ய முடியாம ஆகிடுச்சு..ஆனாலும், பெருத்த இடைக்கு உள்ள, பசிச்ச வயிறு இருக்குங்களே ..என்ன பண்றது ?

அதுக்கு அவங்க தேர்தெடுத்த தொழில் தான்..மெர்சலான விஷயம்...!

'Modeling'

என்ன அவங்கள வெச்சு காமெடி கீமெடி ஏதாச்சும் பண்ணாங்களானு தானே கேக்கறீங்க..அதான் இல்லை..இப்ப அவங்க ஒரு பிரபலமான model, அதுக்கு காரணமே அந்த பெருத்த இடுப்பு தான்...!

என்ன மண்ட  காயுதா..? இந்த அமெரிக்கனுங்களே இப்படி தாங்க..கொஞ்சம் கிறுக்கு புடிச்சவங்க...! இது இப்படி தான் இருக்கணும்னு ஒரு இலக்கணம் வகுப்பாங்க...அந்த இலக்கணம் அதீதமா மீறப்படும்போது அதையும் கொண்டாடுங்க...!

அப்படித்தான் இந்த கொடை இடையாளும் ரொம்ப பிரபலமா ஆயிட்டாங்க...!



91 இன்ச்னா  சும்மாவா ? நான் தான் உலகத்துலயே பெரிய இடைக்காரினு இவங்க தம்பட்டம் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..!



ஆனா பாருங்க..! விதி யாரை விட்டது..?

நீ அவ்ளோ பெரிய 'அப்பா டக்கரி' எல்லாம் இல்ல...! 2013லேயே 'Mikel Ruffinelli ங்கற அமெரிக்க கறுப்பின பெண் 99 இன்ச் பெருத்த இடையோட Guinness Records ல இடம் புடிச்சிட்டாங்கனு சொல்ல..

இதுக்கு மேல இடுப்பை பெருக்க முயற்சி பண்ணினா சங்கு தான்னு Doctors சொல்லிவிட அம்மணி இப்ப ரொம்ப feeling ல இருக்காங்களாம்..! ஐயோ ஐயோ...!

*********************************************************************************

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்















No comments:

Post a Comment