ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 1

1. Project " ஆயா சுட்ட வடை"

"நீ சாமர்த்தா அம்மா ஊட்டும் சாப்பாட்டை சாப்பிடுவியாம், அப்புறம் அதோ வானத்துல தெரியுதே நம்ம ஆயா சுட்ட வடை, அதை அம்மா உனக்கு வாங்கித் தருவெனாம். இப்போ ஆ காட்டு"

அம்மா, ஆயா சுட்ட வடை ஏம்மா வெள்ளையா இருக்கு?

அது தயிர் வடை கண்ணா, அதான்...!

இது தமிழ்நாட்டு தாய்மார்கள் குழந்தைக்கு சோரூட்ட உபயோகிக்கும் ஒரு வழி. (இப்ப இல்லீங்க...ஒரு காலத்துல...!)

பாவம் குழந்தைகள், கடைசிவரை அவர்களுக்கு அந்த தயிர் வடை கிடைக்கவே இல்லை....!

உண்மையில் வேறு யாருக்கு கிடைத்தது அந்த தயிர் வடை ???

இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு, உலகமே களைத்து துவண்டு போயிருந்த போதும், அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் இந்தியா பாகிஸ்தான் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

யார் அடுத்த 'வல்லரசு விஜயகாந்த் ' என முட்டிக் கொண்டிருந்தன.

வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஒரு விதமான பனிப்போர் என்று வர்ணிக்கிறார்கள் (Some sort of Cold War). இந்த பனிப்போர் பல துறைகளில் நிகழ்ந்தது, அதில் மிக முக்கியமானது விண்வெளி ஆராய்ச்சி (Space Research).

இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடி மில்லியன் டாலர்கள் முதலீடு மற்றும் செலவு செய்து ஆராய்ச்சியில் இறங்கின.(At initial state those research were happened for military purposes but later turned to a matter of prestige)

எனினும், நம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் போல கண்மூடித்தனமாக பல கோடி செலவு செய்யும் முட்டாள்கள் அல்ல அவர்கள்...!

யார் கொடுத்த தைரியம் இது ? எந்த நம்பிக்கையில் இறங்கினார்கள் ?

பல ஆண்டுகள் படித்து,  ஆராய்ச்சி செய்து வந்த அறிவியல் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொடுத்த நம்பிக்கையில் என்று நீங்கள் நினைத்தால்....ஐயோ....ஐயோ....!

அவர்களுக்கு அந்த தைரியம் கொடுத்தவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)

 ஆமாம். அவரே தான்....!

பனிப்போர் தொடங்கும் முன் சற்று பின்னோக்கி பார்த்தால், ஹிட்லரின் மேற்பார்வையில் ஜெர்மன் வல்லுநர்கள் மறைமுகமாக பல ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். அதில் முதன்மையானது ராக்கெட் தொழில்நுட்பம் (Rocket Technology). 

சொல்லப்போனால், ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததே ஜெர்மனியர்கள் தான்...!

இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் இங்கிலாந்தை ராக்கெட்டுகளால் துளைத்து எடுத்தார். இறுதியில் நிலமை மாறி ஹிட்லர் வீழ்ந்த பின், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜெர்மனியின் உள்ளே புகுந்து முடிந்த வரை கொள்ளை அடித்து போயின. ரஷ்யா ராக்கெட் தொழில்நுட்பக் கோப்புகளை கொண்டு போக, அமெரிக்காவோ மிச்சம் இருந்த  ஜெர்மன் வல்லுநர்களை கொண்டு போனது.

நம்மூர் ஜோசியர்கள் நவ கிரகங்களின் நிலைகளை வைத்து இந்தியாவிற்கு விடுதலை எப்போது என ஆராய்ந்து கொண்டிருந்த அதே வேளையில் 1947இன் தொடக்கத்தில் தான் பனிப்போரின் இந்த முக்கியமான Project " ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்குவது யார்?" தொடங்கியது.

*************************

2. 'Americans Can't, Even our Bitches can'


ஜெர்மன் வல்லுநர்களை கொண்டு போனாலும், தேவையான கட்டமைப்பு இல்லாததால், உடனடியாக எதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே இருந்தது அமெரிக்கா. உள் கட்டமைப்பும் ஆராய்ச்சி கூடமும் கட்டவே அடுத்த பத்து வருடங்கள் போயின. எல்லாம் தயராகி அமெரிக்கா ஆராய்ச்சியை தொடங்கிய நேரம், ரஷ்யாவோ முதல் வெற்றியையே ருசித்து விட்டிருந்தது.

1957, பனிப்போரின் பத்தாம் ஆண்டு, அக்டோபர் நான்காம் நாள், ரஷ்யா ஸ்புட்நிக்-Iஐ பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. 22 நாட்கள் உயிர் வாழ்ந்த ஸ்புட்நிக்-I தான் உலக  விண்வெளி ஆராய்ச்சியின் முதல் வெற்றி.

அமெரிக்கர்கள் காதில் புகை வர பார்த்துக்கொண்டிருந்த போதே, அதே ஆண்டு நவம்பரில் லூனா-Iஐ விண்ணில் ஏவியது ரஷ்யா. இம்முறை தனியாக அல்ல, 'லைக்கா' என்ற பெண் நாயுடன். பூமியில் இருந்து விண்வெளி போன முதல் உயிரினம் 'லைக்கா' தான்.

இங்கே தான் ஒரு சுவாரஸ்யம்....!

மூன்றே வாரத்தில் அந்த லைக்காவோடு அனுப்பிய ராக்கெட் வெடித்து சிதறியது பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமெரிக்காவை நக்கல் அடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டது  ரஷ்யா. 'Bitch' என்ற ரஷ்ய வார்த்தைக்கு 'பெண் நாய்' என்று பொருள். ஆங்கிலத்தில் அதற்கு வேறு அர்த்தம். அதைக்கொண்டு அமெரிக்காவை செம்மையாக வெறுப்பேற்றியது ரஷ்யா.

அது தான் ' Americans can't, Even our Bitches can'.

அதோடு நின்று விடாமல் தொடர்ந்து அடித்தது ரஷ்யா. 1959 செப்டெம்பரில், கிளம்பிய லூனா-II, 36-மணிநேரம் பயணித்து முதன்முதலில் நிலவை நெருங்கியது. நிலவில் மோதி சாகுமுன் அது அனுப்பிய புகைபடங்கள் தான் மனிதன் நிலவை நெருங்கிப் பார்த்த தருணம்.(அதாங்க....நம்ம ஆயா சுட்ட வடை...!)

ஒரு மாத இடைவெளியில் போன லூனா-III, பூமியில் இருந்து காணமுடியாத நிலவின் மறுபுறத்தை புகைபடங்கள் எடுத்து காண்பித்தது.

ஐயோ பாவம்...அமெரிக்கர்களுக்கு காதில் ரத்தமே வந்தது.

**************************
INTERMISSION (இடைவேளை)

தொடர்ச்சி அடுத்த பதிவில்...! 

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

No comments:

Post a Comment