ஐந்து நாட்களை தாண்டி ஆறாவது நாளாக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ் சமூகம், ஒட்டு மொத்த தமிழகத்தில்.........குறிப்பாக மெரினா கடற்கரையில்.....!
பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியாவை இவை எல்லாம்:
1. உலக வரலாற்றில் இதுவரை கூடிய மிகப்பெரிய கூட்டத்தில் 'ஒழுக்கம்' என்பது 100% கடைபிடிக்கப்பட்டது இங்கு தான்..இங்கு மட்டும் தான்..!
2. பெண்கள்...இளம் பெண்கள்...தாய்மார்கள்..வக்கிரமான சீண்டல்கள் தொடுதல்கள் இல்லாமல் சுதந்திரமாக தமது உடன்பிறப்புகளோடு இருப்பது போல் உணர்ந்து, இருந்து போராடுவது...சத்தியமாக உலகத்தில் இதுதான் முதல் முறை...! (தமிழனாய் பிறந்த எல்லோரும் மார்தட்டி கொள்வோம் )
மெரினா கடற்கரையில் இளம் பெண்ணொருத்தி அமர இடமின்றி, அருகில் இருந்தவன் மடியில் அமர்கிறாள், அவனும் தன் மடி கொடுக்கிறான்..!...இருவருக்கும் இடையே தமிழுணர்வு கொடுத்தது சகோதர பாசம் மட்டுமே..அண்ணா உட்காரட்டுமா...தங்கச்சி உக்காரும்மா.....காமம் கடந்த பாசம், அது தான் தமிழினத்தின் பெருமை..பலம்...!
3. யார் கொடுத்தார்..யவர் கொடுத்தார்...என்ன கொடுத்தார்..எதற்காக கொடுத்தார்...அதெல்லாம் தெரியாது...தாகம் எனில் எங்கிருந்தோ தண்ணீர் வந்தது...பசி எனில் எங்கிருந்தோ உணவு வந்தது...மயக்கம் எனில் எங்கிருந்தோ மருந்து வந்தது...தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்ட ஒரே போராட்டக்களம் இது தான்...!
4. ஒட்டு மொத்த உலக வரலாற்றில் லட்சத்திற்கு மேல் கூடிய மக்கள் கூட்டத்தில்..இது வரை சாராய / சிகரெட் வாசனை வீசாத ஒரே போராட்டம் இது தான்...இது மட்டும் தான்....!
5. நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் இருக்கும் இத்திருநாட்டில், எந்த கட்சியும் சாராத மக்கள் போராட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. (ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட கட்சிகள் முன்னெடுத்தது, சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது )
6. காவல்துறை முழுமனதாக ஏற்று ஒத்துழைப்பு கொடுத்த ஒரே போராட்டம் இது தான் (நேற்று வரை அரசியல் கூத்தாடிகள் பேச்சை கேட்டு மக்களை தடியடித்த காவல் துறையை தான் இது வரை நாம் பார்த்திருக்கிறோம்). இனிமேலும் காவல்துறை ஏவல்துறைஆக இல்லாமல் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படும் என நம்புவோம்
7. ஒட்டு மொத்த போராட்டக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது..உணர்வாக போராடுபவர் யார்...விளம்பரத்திற்காக போராடுபவர் யார் என்று...! உண்மையானவர் வரவேற்கப்பட்டார்...வேடதாரிகள் வெளியேற்றப்பட்டார்கள்...! (பிரபலமானவர்கள் பல பேர் பல்பு வாங்கி ஓடிப்போனார்கள்)
8. பொது மக்களுக்கு இடையூறு இல்லமால் நடக்கின்ற ஒரே புரட்சி போராட்டம் இது தான்...!
நமக்கு தெளிவாக தெரிகிறது...என் தமிழ் சமூகம் விழித்துக்கொண்டு விட்டது...இனி இவர்களை ஏமாற்ற முடியாது...!
அரசியல் வியாபாரிகளே, பன்னாட்டு நரிகளே, இனி உங்கள் பருப்பு இங்கே வேகாது...! வேறு இடம் தேடி ஓடுங்கள்..!
என் தாய் தமிழகம் நீடுதுயில் நீக்கி விழுதெழுந்து விட்டது...! இனி இது இளைஞர் யுகம்...அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் எம் தாய்திருநாட்டை வளமாக்குவதை...!
இப்போது விதைக்கப்பட்டிருப்பது விதை மட்டுமே...இனிமேல் தான் இருக்கிறது...உலகமே காத்திரு...!
இப்போது விதைக்கப்பட்டிருப்பது விதை மட்டுமே...இனிமேல் தான் இருக்கிறது...உலகமே காத்திரு...!
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்
No comments:
Post a Comment