மன்னிச்சு தோழர்களே...வேலை பளு காரணமாக இடைவெளி சற்று நீண்டு விட்டது SORRY...!
Part-1 இல், 10இல் இருந்து 6 வரை பார்த்தோம். மிச்ச மேதைகளை பார்ப்போமா...!
5. அலெக்ஸான்ட்ரியா (Alexandria):
'Aeolipile' என்கிற ஜெட்-பொறி இயந்திரத்தை(Jet Steam Engine) இவர் கண்டுபிடித்த போது அதிகமில்லை...Gentle people....ஏசு கிறிஸ்து மறைந்து 50 வருடங்களே ஆகி இருந்தது. இவரும் ரோம ஆளுகைக்கு உட்பட்ட கிரேக்க நாட்டவர் தான்.
மிகச் சிறந்த ஆய்வாளர். ஆராய்ச்சியின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்பதே இவர் கற்றுக் கொடுத்த கோட்பாடு. தானியங்கி சூத்திரத்தின் தந்தை (Father of Industrial Automation). 'அண்டா கா கஸம் அபு கா ஹுக்கூம்' சொன்னாலும் இவர் இல்லாமல் ஸீஸெ திறந்திருக்காது. (Actually அது 'அண்டா'வா 'அல்லா'வா, எனக்கு படம் பார்க்கும்போது 'அண்டா'னு தான் கேட்டுச்சு...!)
காசு போட்டால் பொருள் கொடுக்கும் எந்திரத்தின் (Vending machine) மூளையும் இவர் தான்.
தொழில்துறை புரட்சி தொடங்குவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு வித்திட்டவர். இன்றைய 10ஆவது & 12ஆவது கணிதம் மற்றும் இயற்பியல் பாட புத்தகங்கள் முழுவதும் நிறைந்து இருப்பது பெரும்பாலும் இவரது கோட்பாடுகளே.
கிரேக்கம் கொடுத்த போறியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு, ஏனெனில் அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியர். கற்றணைத்தூறிய அறிவை பகிர்ந்து கொண்டவர். பொதுவில் இவர் போன்ற ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததை மட்டுமே காட்சிப்பொருள் ஆக்குவர். ஆனால் இவரோ கண்டுபிடிப்பின் சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர்.
குறிப்பு 1: Hollywood திரைப்படங்கள் முதல் பாஹுபலி படம் வரை நாம் பார்த்த பல போர் ஆயுதங்களை வடிவமைத்தவர் இவரே. 'Belopoeica' என்கிற இவர் எழுதிய புத்தகத்தில் போர் ஆயுதங்களை பற்றி விரிவாகப் படிக்கலாம்.
குறிப்பு 2: உலகின் மிகச்சிறந்த அறிவியல் கருவூலமாக கருதப்படும் அலெக்ஸான்ட்ரியா-நூலகத்தில் (Library of Alexandria) தான் தன் வாழ்நாட்களை கழித்திருக்கிறார். இன்றும் அந்த நூலகத்தின் இருப்பிடத்தை கிரேக்கம் முழுவதும் அகழ்வாராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு 3: ஆர்சிமெதஸை 7ஆம் இடத்திற்கு தள்ளி விட்டு இவர் 5ஆம் இடம் பிடித்ததற்கு காரணம் இவரின் கற்றுக் கொடுத்த பண்பே. (Teachers deserves better place than scientists)
குறிப்பு 4: இவர் வாழ்க்கை வரலாறு என்று எதும் நம்மிடம் இல்லை, இவரின் சில படைப்புகளை தவிர. இவர் இயர்-பெயர் கூட தெரியாது. அலெக்ஸான்ட்ரியா பல்கலைக்கழகத்தில் பணி ஆற்றியதால் அதே பெயரில் அறியப்படுகிறார் (The Hero of Alexandria).
4. ஜேம்ஸ் வாட் (James Watt):
அலெக்ஸான்ட்ரியா கண்டுபிடித்த இயந்திரத்தை (Steam Engine) நெறிப்படுத்தி முறைபடுத்திய வெள்ளைக்காரர் இந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வாட் எனும் கண்டுபிடிப்பாளர் (Inventor).
விரையமாகும் ஆற்றலை (Energy) மிகைப்படுத்தி சக்தியை (Power) செயல்திறனாக்கிய செயல் புயல். அதனாலேயே சக்தியை இவர் பெயர் கொண்டே அளக்கிறோம். (SI Unit of Power is 'Watt').
குதிரைத் திறன் கோட்பாடு (The Concept of Horse Power) இவர் கொடுத்தது தான்.
க்ளாஸ்கோ பல்கலைகழகத்தில் (University of Glasgow) முதலில் அனுமதி மறுக்கப்பட்டாலும் பிறகு அங்கிருந்த கருவிகளை பழுதுபார்க்க இவரை விட்டால் ஆளில்லை என்ற சூழலில் கழகத்தில் நுழைந்தார். (இது நமக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற அந்த கழகம் இல்லீங்க இது வேற...!)
ஆரம்பத்தில் எல்லாமே தோல்வி தான். ஆனால் சோர்ந்து போகாமல் (இசைக் கருவிகளும் பொம்மைகளும் தயாரித்து வயிற்றை கழுவி கொண்டே) முயற்சியை திருவினையாக்கியதால் தான் இவர் இன்று வரை நினைவில் இருக்கிறார்.

3 ஆண்டு கடுமையான உழைப்பின் வெளிப்பாடே 1775இல் இவர் கண்டு பிடித்த 'ஆற்றலை மிகைப்படுத்தி சக்தியை செயல்திறனாக்கும்' புதிய முறை. அதுவும் 5 மடங்கு அதிக திறன். அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொழில் புரட்சிக்கு வித்திட்டது.
அடுத்த 6 ஆண்டுகள் இவர் கட்டியது எல்லாமே வெற்றிப் படிக்கட்டு தான். விலை குறைந்த அதிக ஆற்றல் கொண்ட யந்திரங்கள் சந்தைக்கு வந்து மனித உடல் உழைப்பை குறைத்தன.

18ஆம் நூற்றாண்டின் 'அப்துல்கலாம்' ஆக இவர் கொண்டாடப்பட்டார் எனக்கொள்ளலாம்.
குறிப்பு 1: பயனுள்ள பொருளாக மாற்ற முடியாத எந்த கோட்பாடும் வீணானது என்பதே இவர் கொள்கை. எனவே ஆராய்ச்சியின் முடிவு வெற்றி என்றால் மட்டுமே சமண்பாடுகளை எழுதி வைத்தார் (No documentation until success).
குறிப்பு 2: இன்றைய பிரதி எடுக்கும் (Copy from Originals) தத்துவத்தை எளிதாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இவர் தான். இன்றும் நீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் 'க்ளொரின்' (Chlorine) அவர் கொடுத்துதே.
குறிப்பு 3: நம்மவர்களின் அரும்பெரும் இரு குணங்களான பேரம் பேசுவதும் கொசுறு கேட்பதும் இவருக்கு சுத்தமாக பிடிக்காத விஷயங்கள். (அப்ப தமிழனுக்கு இவரு தான் மொத எதிரி...!)
இவரை பற்றிய அறிமுகம் தேவை இல்லை. இன்றைய நவீன வாழ்க்கையின் இன்றியமையா தேவையான மின்சார வெளிச்த்தை கொடுத்தவர். வரலாற்றின் முழுமையான கண்டுபிடிப்பாளர் (The most prolific Inventor) என்றே கொண்டாடப்படுபவர். வெகுஜன உற்பத்தியின் புரட்சியாளர் இந்த அமெரிக்கர்.
1097 காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர் என்ற சாதனையாளர். இந்த தனி மனித சாதனை இதுவரை முறியடிக்கப்படவே இல்லை என்பதே போதும், வேறென்ன சொல்ல...!
பி. யூ சின்னப்பா முதல் வருங்கால ரசிகனின் விசிலுகாய் கனவு காணும் நாளைய நாயகர்கள் வரை எல்லோரும் இவருக்கு கடமைப்பட்டவர்களே.
இவரது மிகப் பெரிய பேருக்கும் புகழுக்கும் வெற்றிக்கும் இன்ன பிற எல்லா ...க்குக்கும் ஒரே காரணம்...தேவைக்கு ஏற்ப கருவிகள் தயாரித்து அதை சரியான முறையில் சந்தைப்படுத்தியது தான்.
கூட்டு முயற்சியினால் மட்டுமே பெரிய சாதனைகளை செய்ய முடியும் என உணர்ந்து ஆராய்ச்சிக்கென மட்டுமாய் தொழிற்சாலைகள் அமைத்தார் எடிசன். அதுவரை தனியாய் பிரிந்திருந்த பொறியாளர்கள், ஆய்வாளர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். அதனால் தான் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தொழிற்சாலையின் பெயரிலேயே வெளி வருகிறது.
அதற்கு பிறகு அவர் தொடங்கியது எல்லாமே தொழிற்சாலைகள் தான். அவருடைய திரைப்பட நிறுவனம் (Edison Film Studio) மட்டும் 1200 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்பு, புதிய நாடு, புதிய பட்டம் என்று தேனி போன்ற சுறுசுறுப்பான வாழ்க்கை இவருடையது (நம்ம டி.ஆர் போலன்னு வெச்சிக்கலாமா...!). பணம், பொருள், இன்பம் என்று எல்லாம் வென்று மிகச்சிறந்த மனிதராய் கொண்டாடப்பட்டார் இவர்.
எல்லாம் முடித்து நிறைவாக செத்தும் போனார். இவரது இறுதி மூச்சுக்காற்று ஒரு குடுவையில் நிரப்பபட்டு இன்றும் அமெரிக்காவின் ஒரு பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. முகத்தின் அச்சும் எடுக்கப்பட்டது.
உலகத்தில் பெரும்பாலோருக்கு அறிமுகமான ஒரு பொறியாளர் (The most popular Engineer in the world) என்று இவரை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
குறிப்பு 1: 'புரிந்து கொள்ளவே முடியாத குழப்பவாதி' என குற்றம் சாட்டப்பட்டதால் 87 நாட்களில் இவரது பள்ளிக்காலம் முடிந்து போனது. போதாக்குறைக்கு காது வேறு மந்தம். தாய் தான் இவரை முழுமையாக செதுக்கியவர்.
குறிப்பு 2: சிறுவயதில் தெருவோரங்களில் செய்தித்தாள் விற்று வாழ்க்கையை தொடங்கியவர், அனுபவ பாடம் மூலமே எல்லாம் கற்றார். கற்ற வித்தையை மொத்தமாய் இறக்கி 14 தொழிற்கூடங்கள் அமைத்தார். General Electric (GE) என்ற உலகப்புகழ் பெற்ற இன்றளவும் இயங்கி கொண்டு இருக்கும நிறுவனமும் அதில் ஒன்று. (பெங்களூரில் இதற்கு பெரிய கிளை அலுவலகம் உண்டு).
தனி குறிப்பு: இந்த நிறுவனத்தின் 'Locomotive' பிரிவில் பணியாற்ற எனக்கு 2008இல் வாய்ப்பு வந்தது. ஆனால் அதிக சம்பளம் காட்டி L&T என்னை GEக்கு போக விடாமல் தடுத்து விட்டது..! (இது இப்ப இங்க ரொம்ப தேவை ஹி...ஹி...!)
குறிப்பு 3: பள்ளிக்கூடத்திற்கே போகாத ஒருவனின் கண்டுபிடிப்பு (Phonograph) என்பது 1837இல் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். அதனால் இவர் 'மெல்நோ பார்க்கின் மந்திரவாதி' (The Wizard of Menlo Park) என்று அழைக்கப்பட்டார்.
குறிப்பு 4: இவர் மின்சாரத்தை கண்டு பிடிக்கவில்லை. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வித்தையை செயல் படுத்தினார். அதில் ஒன்று தான் ஒளிரும் விளக்குகள் (fluorescent bulb / Electric light bulb).
குறிப்பு 5: (சற்றே பெரிய குறிப்பு)
A historical picture of meeting of two greats ‘Sir. Thomas Alva Edison’ & ‘Dr. Henry James Ford.
“I guess you don’t know me..I made the car that you are driving…!”
“I guess you don’t know me either. I invented electric light bulb-- the one that lights the path for your car…!”
எடிசனும் ஃபோர்டும் மிகச்சிறந்த நண்பர்கள். அருகருகே வாழ்ந்தவர்கள். 'Winter Estate' என்று புகழ் பெற்ற தோட்ட பங்களாவில் இவர்கள் இருவரும் தனியாக நாட்கணக்கில் பொழுதை போக்குவார்கள். ஆனால் பிற்பாடே அதன் பயன் வெளிவரும்.
கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும்முன் எடிசனின் நிறுவனத்தில் தான் ஃபோர்டு வேலை செய்தார். தன்னிடம் இருக்கும் 'தானியங்கி மோட்டார் வாகனம்' பற்றிய திட்டத்தை அவர் எடிசனுடன் பகிர்ந்து கொண்டார். அவரை வாழ்த்தி பொருளுதவி செய்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யுமாறு அனுப்பி வைத்தார் எடிசன். 16 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மிகப்பெரிய தொழில் அதிபர்களாக சந்தித்து கொண்டனர். அதன் பிறகு பிரியவே இல்லை.
மிகக்குறைந்த மதிப்பெண்களில் முதல் பத்து இடத்தை தவற விட்ட பொறியாளர்களில் ஃபோர்டு முதன்மையானவர் (11ஆவது இடத்துக்கு சொந்தக்காரர்).
3. தாமஸ் ஆல்வா எடிஸன் (Thomas Alva Edison):
இவரை பற்றிய அறிமுகம் தேவை இல்லை. இன்றைய நவீன வாழ்க்கையின் இன்றியமையா தேவையான மின்சார வெளிச்த்தை கொடுத்தவர். வரலாற்றின் முழுமையான கண்டுபிடிப்பாளர் (The most prolific Inventor) என்றே கொண்டாடப்படுபவர். வெகுஜன உற்பத்தியின் புரட்சியாளர் இந்த அமெரிக்கர்.
1097 காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர் என்ற சாதனையாளர். இந்த தனி மனித சாதனை இதுவரை முறியடிக்கப்படவே இல்லை என்பதே போதும், வேறென்ன சொல்ல...!
ஒலிப்பதிவுக் கருவி(Phonograph), இயங்கு நிழற்பட கருவி (motion picture camera), யெக்ஸ்-ரே கருவி (x-ray machine), பேட்டெரி (Battery), இருவழி தந்தி முறை (two-way telegraphy), என இவரது கண்டுபிடிப்புகளை பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது. மின்சாரத்தை கல்யாணம் செய்து கொண்டு இவர் பெற்றெடுத்த பிள்ளைகள் ஏராளம்.
பி. யூ சின்னப்பா முதல் வருங்கால ரசிகனின் விசிலுகாய் கனவு காணும் நாளைய நாயகர்கள் வரை எல்லோரும் இவருக்கு கடமைப்பட்டவர்களே.
இவரது மிகப் பெரிய பேருக்கும் புகழுக்கும் வெற்றிக்கும் இன்ன பிற எல்லா ...க்குக்கும் ஒரே காரணம்...தேவைக்கு ஏற்ப கருவிகள் தயாரித்து அதை சரியான முறையில் சந்தைப்படுத்தியது தான்.
கூட்டு முயற்சியினால் மட்டுமே பெரிய சாதனைகளை செய்ய முடியும் என உணர்ந்து ஆராய்ச்சிக்கென மட்டுமாய் தொழிற்சாலைகள் அமைத்தார் எடிசன். அதுவரை தனியாய் பிரிந்திருந்த பொறியாளர்கள், ஆய்வாளர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். அதனால் தான் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தொழிற்சாலையின் பெயரிலேயே வெளி வருகிறது.
அதற்கு பிறகு அவர் தொடங்கியது எல்லாமே தொழிற்சாலைகள் தான். அவருடைய திரைப்பட நிறுவனம் (Edison Film Studio) மட்டும் 1200 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்பு, புதிய நாடு, புதிய பட்டம் என்று தேனி போன்ற சுறுசுறுப்பான வாழ்க்கை இவருடையது (நம்ம டி.ஆர் போலன்னு வெச்சிக்கலாமா...!). பணம், பொருள், இன்பம் என்று எல்லாம் வென்று மிகச்சிறந்த மனிதராய் கொண்டாடப்பட்டார் இவர்.
எல்லாம் முடித்து நிறைவாக செத்தும் போனார். இவரது இறுதி மூச்சுக்காற்று ஒரு குடுவையில் நிரப்பபட்டு இன்றும் அமெரிக்காவின் ஒரு பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. முகத்தின் அச்சும் எடுக்கப்பட்டது.
உலகத்தில் பெரும்பாலோருக்கு அறிமுகமான ஒரு பொறியாளர் (The most popular Engineer in the world) என்று இவரை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
குறிப்பு 1: 'புரிந்து கொள்ளவே முடியாத குழப்பவாதி' என குற்றம் சாட்டப்பட்டதால் 87 நாட்களில் இவரது பள்ளிக்காலம் முடிந்து போனது. போதாக்குறைக்கு காது வேறு மந்தம். தாய் தான் இவரை முழுமையாக செதுக்கியவர்.
குறிப்பு 2: சிறுவயதில் தெருவோரங்களில் செய்தித்தாள் விற்று வாழ்க்கையை தொடங்கியவர், அனுபவ பாடம் மூலமே எல்லாம் கற்றார். கற்ற வித்தையை மொத்தமாய் இறக்கி 14 தொழிற்கூடங்கள் அமைத்தார். General Electric (GE) என்ற உலகப்புகழ் பெற்ற இன்றளவும் இயங்கி கொண்டு இருக்கும நிறுவனமும் அதில் ஒன்று. (பெங்களூரில் இதற்கு பெரிய கிளை அலுவலகம் உண்டு).
தனி குறிப்பு: இந்த நிறுவனத்தின் 'Locomotive' பிரிவில் பணியாற்ற எனக்கு 2008இல் வாய்ப்பு வந்தது. ஆனால் அதிக சம்பளம் காட்டி L&T என்னை GEக்கு போக விடாமல் தடுத்து விட்டது..! (இது இப்ப இங்க ரொம்ப தேவை ஹி...ஹி...!)
குறிப்பு 3: பள்ளிக்கூடத்திற்கே போகாத ஒருவனின் கண்டுபிடிப்பு (Phonograph) என்பது 1837இல் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். அதனால் இவர் 'மெல்நோ பார்க்கின் மந்திரவாதி' (The Wizard of Menlo Park) என்று அழைக்கப்பட்டார்.
குறிப்பு 4: இவர் மின்சாரத்தை கண்டு பிடிக்கவில்லை. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வித்தையை செயல் படுத்தினார். அதில் ஒன்று தான் ஒளிரும் விளக்குகள் (fluorescent bulb / Electric light bulb).
குறிப்பு 5: (சற்றே பெரிய குறிப்பு)
A historical picture of meeting of two greats ‘Sir. Thomas Alva Edison’ & ‘Dr. Henry James Ford.
“I guess you don’t know me..I made the car that you are driving…!”
“I guess you don’t know me either. I invented electric light bulb-- the one that lights the path for your car…!”
எடிசனும் ஃபோர்டும் மிகச்சிறந்த நண்பர்கள். அருகருகே வாழ்ந்தவர்கள். 'Winter Estate' என்று புகழ் பெற்ற தோட்ட பங்களாவில் இவர்கள் இருவரும் தனியாக நாட்கணக்கில் பொழுதை போக்குவார்கள். ஆனால் பிற்பாடே அதன் பயன் வெளிவரும்.
கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும்முன் எடிசனின் நிறுவனத்தில் தான் ஃபோர்டு வேலை செய்தார். தன்னிடம் இருக்கும் 'தானியங்கி மோட்டார் வாகனம்' பற்றிய திட்டத்தை அவர் எடிசனுடன் பகிர்ந்து கொண்டார். அவரை வாழ்த்தி பொருளுதவி செய்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யுமாறு அனுப்பி வைத்தார் எடிசன். 16 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மிகப்பெரிய தொழில் அதிபர்களாக சந்தித்து கொண்டனர். அதன் பிறகு பிரியவே இல்லை.
மிகக்குறைந்த மதிப்பெண்களில் முதல் பத்து இடத்தை தவற விட்ட பொறியாளர்களில் ஃபோர்டு முதன்மையானவர் (11ஆவது இடத்துக்கு சொந்தக்காரர்).
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்
No comments:
Post a Comment