உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 1

நாம் வாழும் இந்த நவீன உலகத்தை செதுக்கியது பொறியாளர்களே...!

இன்று நமக்கு இன்றியமையாததான எல்லாமே என்றோ ஒரு நாள் ஒரு பொறியாளன் மூளையில் கருவாகி பின் உருவானது தான்...!

அவர்தம் உழைப்பைப் போற்றும் பொருட்டு உலக அறிவியல் ஆளர்களால் தலை சிறந்த பொறியாளர்களாக கருதப்படும் பத்து பொறியாளர்களை காண்போமா...!

10. நிகோலஸ் ஒட்டொ (Nicholas Otto):



18ஆம் நூற்றாண்டின் பொறியாளர்.  ஜெர்மனியை சேர்ந்த இவர் அடிப்படையில் தேயிலை விற்பனையாளர், தேவையின் நிமித்தம் பொறியாளர் ஆனார். 1876இல் இவர் கண்டு பிடித்த 'உள் எரியூட்டப்படும் என்ஜின்' (Four-stroke Internal Combustion Engine named as Otto Cycle Engine) தான் இன்று தரையில் ஓடும் பெரும்பாலான வாகனங்களுக்கு அடிப்படை. 
கண்டுபிடித்த உடனே அதை பொருத்தி ஒரு மோட்டார் வாகனம் செய்து அதன் மூலம் டீ, காஃபி & சர்க்கரை விற்றார்.




9.ஆலன் ட்யூரிங் (Alan Turing):



19ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து வெள்ளைக்காரர்.
கணிப்பொறியின் பெரும்பாலான கோட்பாடுகளை வகுத்தவர். இவர் உருவாக்கியது தான் கணிப்பொறியின் அடிப்படையான பைனரி கட்டுமானம்(Binary Architecture) என்பது.
இரண்டாம் உலகப் போரில் இவர் உடைத்த ஜெர்மன் எனிக்மா குறியீடுகள்(German Enigma Code) தான் ஹிட்லர் தோற்க காரணம். இல்லையேல் என்றோ ஹிட்லர் உலகை விழுங்கி இருப்பார். போருக்குப் பின் இவரது பங்களிப்பு என்பது கணிணித்துறைக்கு இன்றியமையாதது.
காட்சிப் பொருளாய் எதையும் கண்டு பிடிக்கா விட்டாலும் கணிணித்துறை மீது இவருக்கு இருந்த ஆளுமை காரணமாக கணிப்பொறி அறிவியலின் தந்தை என்று இன்றும் போற்றப்படுகிறார்.

குறிப்பு 1: இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர்

குறிப்பு 2:  இவரை மைய்யப்படுத்தி 2014இல் வெளியாகி சக்கை போடு போட்ட Hollywood திரைப்படம் 'The Imagination Game'.  முடிந்தால் ஒரு முறை பாருங்கள். இன்று நாம் பதிவு எழுதவும் / படிக்கவும் இவர் தானே மூலக்காரணம்.

8. மிகேல் கலாஷ்னிக்கோவ் (Mikhail Kalashnikov):


"எனது கண்டுபிடிப்பின் நோக்கம் தாய்நாட்டின் எல்லையை காப்பது மட்டுமே.  அதன் இன்றைய
பயன்பாட்டுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. இவை அரசியல் வியாபாரத்தால் விளைந்தவை...!"
என்று இந்த 19ஆம் நூற்றாண்டின் ரஷ்ய ராணுவ வீரர் எத்தனை முறை சொன்னாலும் உலகம் இவரை இன்னும் திட்டிக்கொண்டே இருக்கிறது.

உலகிலேயே அதிக உயிர்களை காவு வாங்கியதாக இன்றுவரை கருதப்படும் AK-47 ரைஃபிள்(Rifle) தான் இவரது கண்டுபிடிப்பு. பல தொழில்நுட்பத்தை காப்பி அடித்து தயாரித்திருந்தாலும், அதன் எளிமையும் (cheap to handle & to manufacture), பயன்பாடும் (easy to use at any condition), தானியங்கிதனமும் (Fully Automatic) தான் இவரின் மேதாவிதனத்தை பாறைசாற்றுகின்றன. 60 ஆண்டுகள் கடந்தும் தயாரிப்பில் இருப்பது ஒரு வரலாற்று சாதனை.

குறிப்பு 1: இன்றைய சர்வதேச கள்ளச்சந்தையின் அதிமுக்கிய விற்பனைப் பொருள் இதுதான். விலை அதிகமில்லை Gentlemen...வெறும் $400 (கிட்டத்தட்ட 25,000 ரூபாய்) தான்.

குறிப்பு 2: 2013இல் 94ஆம் வயதில் மறைந்த போது, ரஷ்யா இவரை தேசிய சொத்தாக (National Treasure) அறிவித்தது.

7. ஆர்சிமெதஸ் சயிரகுசே(Archimedes Syracuse):


இவர் சற்று புராதனமானவர், கிரேக்க நாட்டவர், ஏசு பிறப்பதற்கு 287 (287 BC) ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மணித மேதை. இவர் தொடாத துறையே இல்லை. கணிதம், இயற்பியல், வடிவியல், வான சாஸ்திரம் என்று எதனுள்ளும் இவரை அடைக்க முடியாது. 
இவர் கண்டு பிடித்ததாக சொல்லப்படும் நெம்புகோல்(Levers), கவண் (catapult),  உள்ளிழுத்தி (pulleys), போன்ற எதற்கும் தற்போது நம்மிடம் ஆதாரம் இல்லை எனினும், எவ்வளவு ஆழத்தில் இருந்தும் நீரை மேல் கொண்டுவரும் கருவி, கப்பலை கடல் மட்டத்தின் மேல் உயர்த்தும் கருவி, ஆழக்குழி வெட்டும் கருவி என இவரது கண்டு பிடிப்புகளை கிரேக்க எழுத்தாளர்கள் விரிவாக போற்றுகிறார்கள். 

கணிதத்தின் இன்றியமையாத பை(π) இவர் கொடுத்தது தான்.

ஒரு சிலர் இவரை கற்பனை குதிரை ஓட்டியவர் (லூசு) என்று சொன்னாலும் சந்தேகமே இல்லாமல் இன்றைய நவீன பொறியியலின் தொடக்கம் இவர் தான். 

குறிப்பு 1: அரசனின் ஒரு சந்தேகத்திற்கு விடை கண்ட உடனே 'யுரேகா' (கிரேக்க மொழியில் யுரேகா என்றால் கண்டு பிடித்து விட்டேன் என்று பொருள்) கத்திக் கொண்டே வீதியில் நிர்வாணமாக ஓடினாராம் (அதான் லூசுன்டாங்க போல...!)

குறிப்பு 2: கிரேக்கம் ரோம சாம்ராஜியத்தின் கீழ் இருந்த போது, வழி கேட்டதற்கு பதில் சொல்லாததால், இவர் ஒரு ரோமாபுரி வீரனால் அடித்தே கொல்லப்பட்டார்.

6. வில்‌பர் மற்றும் ஆர்‌வில் ரைட் (Wilbur and Orville Wright):


'இறக்கை இல்லாத மனிதன் பறக்க முடியாது' என்பதை டிஸெம்பர் 17, 1903 அன்று மாற்றிக்காட்டிய அமெரிக்க மேதைகள் இந்த அபூர்வ சகோதரர்கள்.

பொறியியல் துறையின் உச்சமாக (From moving machines to flying machines) கொண்டாடப்படும் இவர்களது கண்டுபிடிப்பு தான் வானூர்திப் பொறியியல் (Aeronautical Engineering). 

விமானியின்  கட்டளைக்கு இணங்கி இன்றும் விமானம் பறப்பதற்கு இவர்களின் மூன்று அச்சு கட்டுப்பாட்டு அமைப்பு (three axis control system) தான் காரணம். இறக்கை வடிவமைப்புக்கும் (Propeller design), காற்றியக்கவியலுக்கும் (Aerodynamics) இவர்களே அடிப்படை ஆதாரம்.

குறிப்பு 1: இவர்கள் பிறப்பால் அமெரிக்கர்கள் ஆனாலும், தந்தை இங்கிலாந்துகாரர்,  தாய் ஜெர்மனியர்.

குறிப்பு 2:  இவர்கள் பட்டதாரிகள் இல்லை. 1994ஆம் ஆண்டு வில்‌பர்க்கு அவரது 127ஆவது பிறந்த நாள் அன்று பட்டம் கொடுக்கப்பட்டது. (என்ன...வாங்கத்தான் அவர் உயிரோடில்லை)
****************************

Sorry Folks, ஏதோ விளையாட்டாக தொடங்கிய பதிவு இவ்வளவு நீளும் என்று எதிர்பார்க்க வில்லை. எனவே ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

No comments:

Post a Comment