எட்டாண்டுகளுக்கு முன்......!
ஐக்கிய அமெரிக்க அரசியல் களத்தில் கருப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசத்தொடங்கிய வரலாற்று நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட, அது ஒட்டுமொத்த உலகின் புரட்சியாகவே பார்க்கப்பட்டது..பரப்பப்பட்டது.
அசாதாரணமான அரசியல் சூழலின் முடிவில், ஒரு கருப்பினத்தை பின்புலமாக கொண்ட தலைவர், வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைத்தார்.
கைமுட்டியை உயர்த்தி அவர் எழுப்பிய 'மாற்றத்தை விதைப்போம், அதைக்கொண்டு தேசத்தை வளர்ப்போம்' என்ற மந்திர வார்த்தை, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருப்பார்களோடு, குளிர்கால கோட்டு போட்ட படாடோப வெள்ளையர்களையும் சேர்த்து வசீகரித்தது.
மாற்றத்திற்கான புதிய நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்த பேரின்பத்தோடும் புத்துணர்ச்சியோடும், ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி ஆனார் 'பாரக் ஹுஸைன் ஒபாமா'.
அரசியல் விடிவெள்ளி, கறுப்பின காவலன், உலக அமைதிக்கு வித்திடபோகும் உத்தமன்...! இன்னும் என்னவெல்லாமோ வாழ்த்தொலிகள்.
எழுந்த அத்தனை ஒலிகளையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்தார் ஒபாமா.

எட்டாண்டுகளுக்கு பின்......!
நெருக்கடியான பதவிக்காலத்தின் கடைசீ நாட்களை நரைத்துப்போன வெள்ளை தலைமுடியுடன் கழித்துவருகிறார் அவர், எந்தப்பேரின்பமும் புத்துணர்ச்சியும் இல்லாமல்.
சக்தி வாய்ந்த பிரச்சாரத்திற்கும் உண்மையான நிதர்சனத்திற்கும் உள்ள இடைவெளியை அவர் புரிந்து கொண்டவராகவே காணப்படுகிறார், ஓட்டுப்போட காத்திருக்கும் அமெரிக்கர்களைப்போலவே.
பிளவு படுத்தப்பட்ட, ஒட்டாத பல செயல்திட்டங்களினால் அமெரிக்காவை பின் நோக்கி தள்ளி விட்டதாய் எழும் கடுமையான விமர்சனங்களை மவுனமாய் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், காத்திருக்கிறார் ஒபாமா.
இனி, அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பாய் கோடிடப்பட்டு காணாமல் போகப்போகும் திரு. ஒபாமா அவர்கள் இதுவரை சாதித்தது என்ன?
தாம் முன்வைத்த அரசியல் தத்துவத்தை பின்பற்றி தனது நிர்வாகத்தை சரியாக கட்டமைத்ததாக அவரால் மார்தட்டிக்கொள்ள முடியுமா?
மாற்றத்தை விதைத்து, அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக உலகம் ஒத்துக்கொள்ளுமா ?
ஒபாமா சொன்னது என்ன ? சாதித்தது என்ன ?
**********
2007ஆம் ஆண்டு, அமெரிக்க தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்த உதய சூரியன் (ஆமாம் உதய சூரியன் தான்) சின்னத்தின் பின்புலத்தில், நரைக்காத கருப்பு தலைமுடியோடு, தான் விரும்பும் மாற்றமும், அதனால் நாடு பெறப்போகும் ஏற்றத்தையும்..ஒரு நீண்ட பட்டியலில் வெளியிட்டார் ஒபாமா. அதில் மிக முக்கியமானவை:
1. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் உலகளாவிய மருத்துவக்காப்பீடு.
2. அமெரிக்கர்களின் வாழ்வில் ஏழ்மைக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி.
3. மேம்படுத்திய பொருளாதார கொள்கைகள் மூலம் வருமான உற்பத்தி.
4. உலக வெப்பமயமாதலை தடுக்கும் தீவிர பன்னாட்டு முயற்சி
5. வந்தேறிகளுக்கான புதிய சீர்மையான கொள்கை
6. போர் சூழல்களை தடுக்கும் அமைதிக்கான அந்நிய மேம்பாட்டுக்கொள்கை.
முதல் மூன்று அமெரிக்க நிலை சார்ந்தது. அடுத்த மூன்று உலக நிலை சார்ந்தது.
இந்த ஆறு அம்சங்களின் இலக்குகளை நோக்கி ஒபாமா கடந்து வந்திருக்கும் தூரம் தான் அவருடைய செயல்திறனை சீராய்வு செய்யும் காரணி என்பது உலக மதிப்பீட்டாளர்களின் ஒப்பீடு.
1. உலகளாவிய மருத்துவக்காப்பீடு:
2010இல் சட்டமாக்கப்பட்டு, 2014இல் செயல்முறைக்கு வந்த 'ஒபாமாகேர் (ObamaCare)' காப்பீடு திட்டம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை காப்பீட்டு கட்டத்திற்குள் கொண்டு வந்து, ஒபாமாவை அமெரிக்கர்களின் நடுவே உயர்த்திக்காட்டியது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விமர்சனங்கள் எழுந்தாலும், இத்திட்டத்தின் பரவல், 2012இல் மறுபடியும் ஒபாமாவின் வெற்றிவாய்பை உறுதிப்படுத்தியது.
5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே முறையான மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை தனது மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடும் ஒபாமா ஐரோப்பிய நாடுகள் இந்த காப்பீட்டு விஷயத்தில் என்றோ தன்னிறைவு பெற்று விட்டன என்பதை ஏனோ வெளிகாட்டிக்கொள்ளவில்லை..
2016 வந்த பின்பும், அந்த 'உலகளாவிய' என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது அமெரிக்கர்களுக்கு.

2. ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி:
அனைத்து அரசியல்வாதிகளும், பொதுவில் வைக்கும் வாக்குறுதியாகவே பார்க்கப்பட்டு அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த 'ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி', இங்கு மட்டும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கப்பட்டது..சொன்னது ஒபாமாவாக இருந்ததால்.
மற்ற நாடுகளின் ஏழ்மை நிலைக்கும் அமெரிக்க ஏழ்மை நிலைக்கும் அதிக வித்யாசம் உண்டு. இங்கு ஏழ்மை என்ற வார்த்தைக்கு பூர்வ குடி கறுப்பின மக்கள் என்றே பொருள்படும். மொத்த ஜனத்தொகையில் 13% மேல் இருக்கும் இவர்களுக்கு அமெரிக்க ஆடம்பர வாழ்க்கை என்பது எட்டாக்கனி.
முதலாளித்துவ கோட்பாடுகளை எதிர்த்து, இவர்களுக்கு ஒபாமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அமெரிக்க ஊடகங்கள் ஒத்துக்கொள்கின்றன. நிற வெறியை உடைத்த ஒபாமாவின் எட்டாண்டு வெள்ளை மாளிகை வாசம் மட்டுமே தங்களுக்கு கிடைத்த அதிகப்படியான பலன் என்பதை வேதனையோடு அந்த சமூகம் பார்க்கிறது.
2016இல், ஹிலாரி கிளின்டனின் வாக்குறுதிகளில் மறுபடியும் காணக்கிடைக்கிறது...இந்த ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி.

3. புதிய பொருளாதார கொள்கைகள்:
மிக மோசமான அமெரிக்க பொருளாதார சூழலின் நடுவே தான் ஒபாமா பதவி ஏற்றார். 2008இல் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் எட்டு சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. பம்பரமாய் சுழலபோவதாய் காட்டிக்கொண்ட ஒபாமா அரசு நிதானமாகவே செயல்பட்டது.
வருமானத்தில் ஏற்றமில்லாமல் ஐந்து சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்ட வேலையின்மை, அமெரிக்க மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. பழைய முதலாளித்துவத்தின் பிரதிபலிப்பாக வெளிவந்த புதிய பொருளாதார கொள்கைகள் அவர்களின் பொறுமையை சோதித்தன. முடிவு, ஒபாமா மீது வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கின.
2016இல், அமெரிக்க பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒபாமா கருப்புத்தோல் போர்த்திய வெள்ளைப்புலியாகவே கருதவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
4. புவி வெப்பமயமாதல்:
அமரிக்கா ஜனாதிபதி என்பதை மீறி உலகம் ஒபாமாவை உற்று நோக்கியது இந்த விஷயத்தில் தான். Global Warming என்பது வெத்து விஞ்ஞானிகள் கூறும் புரட்டு கதை என்று உலக சாமானியர்கள் ஒதுக்கி வந்த வேளையில் தான் வீறு கொண்டு இதைப் பற்றி பேசினார் ஒபாமா.
உலகத்தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியபோது உலகமே இதனை தீவிரமாக எதிர்நோக்கியது, ஒபாமாவுடன் சேர்ந்து கவலைப்பட்டது. தடுப்பதற்குண்டான தீர்வுகளை ஆராய்ந்தது.
ஆனால், அமெரிக்க மோட்டார் வாகன கூட்டமைப்பின் எச்சரிக்கைக்கு பணிந்து, கார்பன் கழிவுகளை கட்டுப்படுத்தும் மசோதாவிற்கு ஒபாமா அரசு தடை விதித்த பொது, நரியின் சாயம் வெளுத்துப்போனது.
2016இல், ஒபாமா Global Warming பற்றி மூச்சு கூட விடுவதில்லை....!
5. வாழவைக்கும் வந்தேறிகளுக்கு ஜே:
இது ரொம்ப முக்கியமான விஷயம். அமெரிக்க கட்டமைப்பின் அடிப்படையையே ஆட்டுவிக்கக்கூடிய விஷயம். அமெரிக்காவை பொறுத்தவரை இது ஒருவிதமான முட்கள் நிறைந்த சோலைவனம்.
சோலைவனத்தின் பூக்கள் அமெரிக்க வளர்ச்சியில் இன்றியமையாத தேவை. ஆனால் முட்கள் களையெடுக்கப்பட வேண்டியவை.
ஒபாமாவின் மிதவாத தத்துவம் முட்களை மட்டும் கண்டுகொண்டு பூக்களாக மாற்ற முயன்றது. ஒரு கோடிக்கும் மேலாக மண்டிக்கிடந்த மெக்ஸிகோ மற்றும் ஸ்பானிய (español) முட்களை அமெரிக்க பூக்களாக மாற்றும் முயற்சியில் பூத்துகுலுங்கும் ஆசியப்பூக்களை அவர் அதிகம் கண்டுகொள்ளாமால் போனது காலக்கொடுமை.
சம்பாதிக்க வந்தவர்களிடமிருந்தும் வரப்போகிறவர்களிடமிருந்தும் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தது ஒபாமாவின் அரசு. அமெரிக்க கல்வியும், தொழிலும், வாழ்வும் அதிக விலையில் விற்பனைக்காக உலகச்சந்தையில் வைக்கப்பட்டு மதிப்பிழக்கும் நிலை மட்டுமே மிஞ்சியது.
2016இல் தராதரமின்றி காசிருக்கும் யாரும் இங்கே படிக்க வரலாம். தகுதியின் தரம் குன்றிப் போனாலும், சொந்தக்காசில் ஐந்து வருடம் வரை வெட்டியாய் வேலை தேடலாம்.
6. அந்நிய மேம்பாட்டுக்கொள்கை
பதவியேற்கும் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் சொல்லி அடிக்கும் கில்லியான துறை இது. உலகளாவிய பார்வையில் தன்னை உயர்த்திக் காட்டவும், உள்நாட்டு தோல்விகளை மறைக்கவும், மத்திய கிழக்கு நாடுகளை பர்கர் ரொட்டிக்குள் நுழைத்து, பார்பிகியூ ஸாஸ் ஊற்றி சாப்பிடுவது அவர்களுக்கு கை, கால் எல்லாம் வந்த கலை.
உருப்படியாக எதுவும் செய்வதற்கு முன்பே 'நோபல்' பரிசு தேடி வந்தது ஒபாமாவிடம். 'டாஸ்'ஸில் பெற்ற வெற்றியோடு ஆட்டத்தை இவர் முடித்துக்கொண்டதாகவே சொல்கிறது உலக ஊடகவியல்.
ஆனால், உண்மையில் 20 ஆண்டு அமெரிக்க வெளிநாட்டு அரசியல் பாணியில் இருந்து ஒபாமா சற்று விலகி நின்று தனது தனித்துவத்தை நிச்சயம் வெளிப்படுத்தினார் என்றே கருதவேண்டியிருக்கிறது...!
புஷ்ஷின் முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்று, இவர் ஏற்படுத்திய நிம்மதி பெருமூச்சு..இன்னும் நிலைத்து நிற்கிறது. ஆயினும், அதுவே 'ஐஸிஸ்' அசுரனை வளர வழி செய்ததென்கிற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை.
வேறெந்த அதிபராக இருந்திருந்தாலும், ஆயுத சந்தையின் வளர்ச்சிக்காக 'சிரியா'வின் மீது நிச்சயம் அமெரிக்கா போர் தொடுத்திருக்கும், அணு ஆயுத வளர்ச்சியை தடுப்பதாக சொல்லிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்திருக்கும். ஆனால் ஒபாமா அதை செய்யவில்லை.
ரஷ்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், என்று அமெரிக்க அதிபர்கள் எச்சில் துப்பும் எந்த தேசத்தோடும் ஒபாமா முறுக்கிக்கொள்ளாமல் காட்டிய மென்மையான போக்கு, பதுங்கி இருந்த சீனப்பாம்பு படமெடுத்து ஆடுவதற்கும் காரணமாகிப்போனது.
அமைதியை அழுத்திப்பிடித்து உயர்த்தி நிறுத்தியதில், ஒபாமா இந்த விஷயத்தில் நிச்சயம் ஒரு கதாநாயகன்.
2016இல், உள்நாட்டில் வெடிக்கும் துப்பாக்கி கலாச்சாரதையும், தீவிரவாத அச்சுறுத்தல்களையும், அடுத்து வரும் அதிபருக்கு விட்டு செல்ல காத்திருக்குறார் ஒபாமா.
'என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை...ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..நான்...அப்பாவி இல்லை...!'
பாவம்..ஒபாமாவிற்கு தெரியவில்லை போலும்..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று....!
நிச்சயமாக, இந்தக்கட்டுரை எனது சொந்த பார்வை அல்ல. எழுத்துக்கள் மட்டுமே என்னுடையது. எண்ணங்கள் எல்லாம் என்னுடைய 5 வருட அமெரிக்க வாழ்வில் கிடைத்த நண்பர்களுடையது. வெள்ளையும், கருப்பும், இந்தியமும் கலந்த நட்புக்கூட்டம் அது. ஆனால், சிந்தனையிலும், செயலிலும் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு அடிக்கடி உணர்த்தும் கூட்டம். என் அடி நெஞ்சில் இருந்து புறப்படும் நன்றிகள் அவர்களுக்கு.
நிதர்சனங்களை சொல்லுங்கள்..உங்கள் சுய விருப்பு வெறுப்பு வேண்டாம், என்ற என் கோரிக்கையை ஏற்று..அவர்கள் கொடுத்த எண்ணத்தொகுப்பின் எழுதுவடிவமே இந்த பதிவு...!

*********************************
8 வருட ஆட்சியின் முடிவில், ஒபாமா தன்னை ஒரு நல்ல மிதவாதியாகவே வெளிப்படுத்தி யிருக்கிறார். 'உலகத்திற்கு பொதுவான அமெரிக்க தலைவன்' என்ற.....தான் உருவாக்கிய அந்த நேர்மறை பிம்பத்தை (Positive Image) விட்டு அவர் வெளியே வரவில்லை.
ஒபாமா, ஒரு தனித்துவமான அம்பு. எந்த வில்லில் இருந்தும் புறப்படாத, மிகச்சிறந்த இலக்குகளை குறிவைத்து தானே தன்னை செலுத்திக்கொண்டு, வீறுகொண்டு சீறிப்பாய்ந்த அம்பு. ஆனால், பாய்ந்த அம்பு இலக்கு வட்டத்தை தைக்காமல், கொஞ்சம் முன்னாலேயே தொய்ந்து தரையில் வீழ்ந்து போனது வரலாற்றின் பரிதாபம்.
கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நடைபயின்ற அவரது கம்பீரம், கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது. இப்பொது தான் தெரிகிறது, பின்னால் கட்டிக்கொண்டிருந்த கைகளில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவ காப்பு. அது விரும்பிய பொது மட்டுமே ஒபாமாவால் கை உயர்த்தி மக்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரிக்க முடிந்திருக்கிறது.
கம்பீரமாய், பிரமிப்பாய் காணக்கிடைத்த ஒபாமா இப்போது பாவமாய், அப்பாவியாய் கண்டுகொள்ளப்படுகிறார்...!
சில நாட்களுக்கு முன் இப்படி சொன்னார் ஒபாமா:
'என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை...ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..நான்...அப்பாவி இல்லை...!'
பாவம்..ஒபாமாவிற்கு தெரியவில்லை போலும்..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று....!
*********************************
நிச்சயமாக, இந்தக்கட்டுரை எனது சொந்த பார்வை அல்ல. எழுத்துக்கள் மட்டுமே என்னுடையது. எண்ணங்கள் எல்லாம் என்னுடைய 5 வருட அமெரிக்க வாழ்வில் கிடைத்த நண்பர்களுடையது. வெள்ளையும், கருப்பும், இந்தியமும் கலந்த நட்புக்கூட்டம் அது. ஆனால், சிந்தனையிலும், செயலிலும் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு அடிக்கடி உணர்த்தும் கூட்டம். என் அடி நெஞ்சில் இருந்து புறப்படும் நன்றிகள் அவர்களுக்கு.
நிதர்சனங்களை சொல்லுங்கள்..உங்கள் சுய விருப்பு வெறுப்பு வேண்டாம், என்ற என் கோரிக்கையை ஏற்று..அவர்கள் கொடுத்த எண்ணத்தொகுப்பின் எழுதுவடிவமே இந்த பதிவு...!
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்
No comments:
Post a Comment