ஐந்து நாட்களாய் அகிலமெங்கும் கபாலி தான்...தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் கபாலிக்கே. விவாதத்திற்கு வேறொரு பொருளின்றி தனித்து நிற்கிறான் கபாலி...!
அதிகம் காசு வைத்து விற்றது, காரித்துப்பிய நீல சட்டையை இணையத்திலேயே கழுவி ஊற்றியது, பிற சாந்தும், இந்து கிருஷ்ணாவும் கபாலிக்கு மொட்டை அடித்தது, இடையில் அதிரடியாய் சிவாவின் முத்து சிதறல்கள் என்று எல்லா விஷயங்களையும் தாண்டி, தமிழ் ரசிகனுக்கு குறிப்பாக ரஜினி ரசிகனுக்கு கபாலி தொடர்ந்து விருந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறது...!
'தெறி'யும், 'வேதாள'மும் வெற்றிக்கொடி கட்டிய தமிழ் கூறும் நல்லுலகில் கபாலி தறிகெட்டு ஓடுவது மிகையே அல்ல...! கபாலி கல்லா கட்டவில்லை என்றால் தான் கவலை பட வேண்டும்.
லிங்காவில் கற்ற பாடம் கைப்பெற, கபாலியின் கலெக்ஷனுக்கு கட்டயம் கூறுகின்றது (காத தூரம் நோக்கினும் காணக்கிடைக்கவில்லை யாதொரு சிங்காரவேலனும்.) கலைபுலியின் கடைவாய் ஓரப்புன்னகை...!
கோச்சடையானும், லிங்காவும், ஏற்படுத்திய அஜீரணத்திற்கு, கபாலி எனும் மருந்து குடித்து விட்டார் ரஜினி, ஏப்பமாய் அறிக்கை வெளியிட்டவாறே.
ஆனால் ரஞ்சித் என்ற படைப்பாளிக்கு ?
நிச்சயம் இது தோல்வி. விடு பூக்களை அழகிய மாலையாய் தொடுக்காமல் வரிசை மட்டுமே படுத்தி...படுத்தி எடுத்து விட்டதன் விளைவு...! கருத்தியலின் கழுத்தறுக்கப்பட்டு விட்டது கபாலியில் என்பதே நிதர்சனம்.
ஒடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் அடுக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, ரஞ்சித்தின் தீர்வு.....அசடு வழிகிறது கபாலியின் துப்பாக்கியை போலவே...!
முன்னேற முடியாமல் தவிக்கும் தமிழ் சமூகத்தின் முகத்தில் உமிழ்ந்த எச்சிலின் மிச்சத்தை கடல் கடந்து காசாக்கி விட்டதுடன் முடித்து போகும் இவர்களின் சமூக அக்கறை...!
இனி என்ன?
கபாலியின் கங்குல் இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே....!
சூடு தணிந்ததும் தணிந்து விடும் மலேசிய தமிழர்களின் வாழ்வுரிமை கவலைகள்...! உள்ளூர் பிரச்சனைகள் ஓராயிரம் இருக்க, இனி உச்சு கொட்ட மட்டுமே உதவும் இவர்களின் வாழ்க்கை போராட்டம்...ஈழத்தமிழினம் போல...!
கை கொட்டி ரசிக்க நமக்கு கலைப்படைப்புகளா இல்லை..! அடுத்தடுத்து வரிசை கட்டும் காட்சிப்பொருட்களிடையே கூடிய சீக்கிரம் கபாலியும் காணாமல் போகும்...!
அடுத்து, தமிழ் கூறும் நல்லுலகம் இனி காத்துக் கிடக்கும் 2.0 காய்..!
ஆம்..கூடிய விரைவில், இன்னொரு முறை...இன்னொரு படைப்பு..இன்றிலிருந்தே தயாராய் இருங்கள் தோழர்களே..பிரம்மாண்டத்தின் உச்சம்...! யந்திரத்தின் இரண்டாம் பாகம்.
உங்களுக்குள் கருவாகி காத்திருக்கும் கனல், இன்னொரு முறை நெருப்பாகும்...அது வரை காத்திருப்போம்..கபாலி கடந்து போகும் பாதையிலேயே...!
*********************************************************************************
ஸ்ரீராம் சம்பத்குமார்
அருமையான பதிவு நண்பா. கீழ் கொடுக்கப்பட்டுள என்னுடைய பதிவை பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteகபாலி - திட்டமிட்டு சதி செய்து அடைந்த வெற்றி
http://vaangapesalamvaanga.blogspot.se/2016/07/blog-post_28.html
Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***
ReplyDeleteMakizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.
After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.
Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!
Watch more Kabali!
By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. RanjIt.