எல்லாம் கடந்து போகும்...!

தாய்மைக்குக் கொள்ளி 

அது ஒரு அமைதியான ஐரோப்பிய காலை..!

குளிர் இன்னும் விலகாத மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரம்...22ஆம் தேதி..!

ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைநகரம் Brussels, அந்தக் காலை வேளையிலும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது, கூடவே Zaventem சர்வதேச விமான நிலையமும். வருடத்திற்கு 2.5 கோடி பயணிகளுக்கு சேவை செய்வதால் அங்கே சோம்பலுக்கு இடமில்லை.

20,000ம் பணியாளர்களும் 260 நாடுகளுக்கு பறக்கப் போகும் பயணிகளும் அவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் கடைக்காரர்களும் என அது எப்போதும் போல ஒரு பரபரப்பான காலை. மணி 7.55 AM 

"குழந்தைகளா...அங்கே இங்கே ஓடாம ஒரு இடத்துல இருங்க" என்று மூன்று வயதே நிரம்பிய தன் இரட்டை பெண் குழந்தைகளை தாய்மையோடு கண்டித்த அடேல்மா தாபியா, விமானத்தின் புறப்படும் நேரம் பார்த்தார். Brussels இல் இருந்து New York  போகும் British  Airways  நுழைவாயிலில் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது தான் தன் அருகில் வந்த அந்த மனிதனை பார்த்தார்

அவனிடம் ஒரு பதட்டம் இருந்தது. இன்னமும் check-in செய்யாத luggage trolley யோடு நின்று கொண்டிருந்தான் அவன்அடேல்மாவின் கவனத்தை ஈர்த்தது அவன் விநோதமாய் அணிந்திருந்த கையுறை (Glouse) அதுவும் இடது கையில் மட்டும்...!

இரண்டில் ஒரு குழந்தை மட்டும் சற்று தூரத்தில் வரும் தந்தையை நோக்கி ஓட, அடேல்மா அந்த வினோத மனிதனிடம் இருந்த கவனத்தை தன் குழந்தையை நோக்கி திருப்பிய அந்த வினாடியில் தான் அது நிகழ்ந்தது...!

அது ஒரு மனித வெடிகுண்டு. பயங்கரவாதத்தின் எச்சம். தீவிரவாதத்தின் மிச்சம்.

உடல் சிதறி செத்துப்போனார் அடேல்மா. சாகும் தருவாயில் என்ன நினைத்திருப்பார் அவர்

மூன்றே வயதான இரு குழந்தைகளையும் இனி யார் பராமரிப்பார்கள் என்றா?

இல்லை...நிச்சயம் இல்லை..இந்தத் தீவிரவாதம் அவருக்கு வினாடி கூட நேரம் கொடுக்கவில்லை. ஏழு துண்டுகளாக அவரை துண்டித்து போட்டதுஅவரோடு சேர்த்து இன்னும் 33 உயிர்களையும் பலி கொண்டது.




குண்டு வெடித்த செய்தி கேட்டு பதறிய இன்னொரு தாய் அன்னபூரணி சென்னையில் இருந்து உடனே, Infosys மூலமாக Brussels இல் வேலை பார்க்கும் தன்  மகன் ராகவேந்திர கணேசனை தொடர்பு கொண்டார்

தான் பத்திரமாக இருப்பதாகவும், குண்டு வெடித்தது விமான நிலையத்தில் தான் என்றும் தான் ரயிலில் பயணம் செய்வதாகவும், பிறந்து 40 நாட்களே ஆன தன் மகனை கவனித்துக் கொள்ளுமாறும் பதில் வந்தது கணேசனிடம் இருந்து

சற்றே நிம்மதி அடைந்த அந்த தாய்க்கு தெரியாது விதி வலியது என்று. அது தான் அவர் கடைசீயாக தன்  மகனிடம் பேசியது




விதி என்ன சதி செய்தது ? ஆமாம் விதி தான் விளையாடியது. அங்கே விமான நிலையத்தில் அண்ணன் வெடித்தான். இங்கே ரயிலில் தம்பி வெடித்தான்

அண்ணனும் தம்பியும் சேர்ந்து இரண்டு தாய்மைக்கு கொள்ளி  வைத்தார்கள்.

இந்த இரண்டு கொடுமையான இழப்புகளுக்கு, நாகரீக உலகம் என்ன சமாதானம் சொல்லப் போகிறது ???

**************************************************************************

செம்ம தில்லுயா உனக்கு 

 சரி...மொதல்ல ஒரு விஷயத்தை தெளிவு படுத்திடுவோம்…! 

Selfie ன்னா  என்ன?

The Oxford English Dictionary defines it as "a photograph that one has taken of oneself, typically one taken with a smartphone or webcam and uploaded to a social media website."

ஆனா நம்ம தில்லு தொரை ஒருத்தரு தான் எடுத்துக் கிட்டதா வெளியிட்ட ஒரு Selfie  படம் செம்ம கெத்து காட்டுது. உலகமே இந்த படத்தைப் பார்த்துட்டு மருவிகிட்டு இருக்கு.

பென் (Ben ) இங்கற நம்ம தில்லு தொரை தான் செல்பி எடுத்துக்கிட்டது, அதுவும் ஒரு விமானப் பயனதுல, நாடு வானத்துல.

ஏதாவது ஒரு செம்ம figure ஆன  Air hostess  கூடவான்னு எதிர்பார்த்தா...அதான் இல்ல .

‘அல் -தின்முஸ்தபா’ னு  ஒருத்தனோட .

அப்புடி என்ன விசேஷம் அந்த Selfieலன்னு கேக்குறீங்களா ?

இந்த அல் -தின்முஸ்தபா’ தான் அந்த விமானத்தையே கடத்தி இருக்காபுடி.

இடுப்புல குண்டை வெச்சிக்கிட்டு அந்த ஆளு விமானத்தை மூணு மணி நேரமா தன்னோட கட்டுபாட்டுக்குள்ள வெச்சிருக்கும்போது  நம்ம  தில்லு தொரை ‘Hee..Hee..Can I take a selfie with you?’ னு  கேட்க அந்த ஆளும் எடுத்துக்கோனு பெருந்தன்மையா சொல்ல..அதாங்க இது…!



Selfieனு  சொன்னாலும், நல்லா வரணுமுன்னு வேற ஒருத்தரை எடுக்க சொன்ன படமாம் இது..ஐயோ...ஐயோ...!

நம்ம ஆள  பாருங்க..! கஷ்டபட்டோ இஷ்டபட்டோ வரவழைச்ச சிரிப்பு...தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு...!


*********************************************************************************

இன்னும் மனிதம் சாகவில்லை ....!

டென்மார்க் கை சேர்ந்த ஒரு சமூக சேவகர் அன்யா லோவீன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நைஜீரியாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் சேவையாற்ற போயிருந்த போதுதான் அந்தக் கொடுமையை கண்டார்.

நெஞ்சை உறைய வைக்கும் அந்த காட்சி அவர் வாழ்க்கையையே மாற்றி  விடும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

எலும்பும் தோலுமாய் சாவின் கடைசி விளிம்பில் இரண்டு வயதே ஆன அந்தக் குழந்தை.

அருகில் போனவரிடம் 'நெருங்காதே..அது சூனியகார சாத்தான், அதன் அருகில் போனாலே பாவம்..தீமை நடக்கும்என்று தடுத்தனர் கிராம மக்கள்.

பெற்றோராலும் சமூகத்தாலும் 'சாத்தான்' என்று ஒதுக்கப்பட்டு, உணவு, உடை, உறைவிடம் எல்லாம் மறுக்கப்பட்டு தெருவில் சுற்றித் திரிந்து...அழுவதற்கு கூட முடியாத நிலையில், இப்போது சாவின் விளிம்பில்...!

தடுத்தவர் முகத்தில் காறித்தூ’ வென உமிழ்ந்தார் லாவின். அருகில் போய் முதலில் தண்ணீர் கொடுத்தார். பிறகு பிஸ்கட் கொடுத்தார்.

இல்லை அந்தக் குழந்தையால் நீரைதவிர வேறு எதையும் உண்ண முடிய வில்லை. உடனே தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.


அதற்குப் பிறகு எல்லாம் வேகமாக நடந்தன. அந்தக் குழந்தைக்கு ‘Hope’ நம்பிக்கை என்று பெயரிட்டார் 

அந்தக் குழந்தையை பற்றி தனது சமூக வலைதளங்களில் எழுதினார். youtube  இல் வீடியோ வெளியிட்டார், நிதி கேட்டார். ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த பிஞ்சுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

நம்பவே முடியாத அளவுக்கு நன்கொடை சேர்ந்தது (more than one million American dollars) கிட்டத்தட்ட ஏழு கோடி ருபாய்.

இவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க, ‘இது Hope க்காக  வந்த பணம். இவனைப் போல் உள்ளவர்களுக்காக மட்டுமே இது பயன் படவேண்டும் என்றார் 

இன்று அன்யாவின் குழந்தைகள் காப்பகம் 35 சிறார்களுக்கு அடைக்கலம் கொடுத்திருகிறது, Hope உடன் சேர்த்து.
மூன்று மாதங்கள் ஆகி விட்டன. அன்யா தன்  முகநூலில் நேற்று இப்படி ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார் 

"Hope is really enjoying his life now having 35 new brothers and sisters who all take such good care of him, play with him, study with him, and make sure he is safe and is getting a lot of love."

சரி.. எலும்பும் தோலுமாய் சாவின் கடைசி விளிம்பில் உடல் முழுக்க புழுக்கள் நெளிய அழுக்காய் இருந்த அந்தக் குழந்தை இப்போது எப்படி இருக்கிறது ? நீங்களே பாருங்கள்…!

உலகில் இன்னும் மனிதம் செத்து விட வில்லை. அதற்கு இந்த நம்பிக்கை ஒரு சாட்சி.
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்